இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட "இட்லி" வசனம் தான் நினைவிற்கு வரும். அதையும் தாண்டி கம்யூனிசத்திற்கு ஒரு (உண்மையான) வரலாறு இருப்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அக்கதைகளை சற்று சுருக்கமாக எழுத முற்பட்டுக்கொண்டிருக்கிறேன். விரைவில் வெளியிடுவேன் என நம்பிக்கையோடு......

பெப்சி கோக் வேண்டாம், விசா மாஸ்டர் வேண்டுமா! ஒரு அலசல்

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் பெப்சி கோக்  பானங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு வாடிக்கையாளர் மனமாற்றமே காரணம். இதன் பின்னணி அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் இந்த குளிர்பான நிறுவங்களை விட அதிக ஆதிக்கம் செலுத்துவதும் , நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதும் , பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதிலும் அதிக பங்கு வகிப்பது விசா மாஸ்டர் போன்ற அந்நிய மென்-கட்டண-நுழைவாயில் (PaymentGateway) நிறுவனங்கள் .

ஏன் ?:

கடந்த சிலபல வருடங்களில் ரஷ்யா சந்தித்த நெருக்கடிகளில் சிலவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. எப்பொழுதெல்லாம் ரஷ்யா அரசின் மீது பொருளாதார தடை விதிக்க படுகிறதோ அப்போழுதெல்லாம் , அமெரிக்கா மற்றும் வேற்று நாட்டு மென்-கட்டண-நுழைவாயில்கள் ரஷ்யாவில்  செயல்படுவதை நிறுத்தவோ அல்லது குறைத்துக்கொள்ளவோ செய்துவிடும்.

இந்த தொடர் நிகழ்வினால் கோபமுற்ற ரஷ்யா அரசு , தன்னுடைய உள்நாட்டு தயாரிப்பான மீர் (Mir Payment ) முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதை தாமதமாக செய்ததனால் பெரிய அளவில் பொருள் மற்றும் இதர இழப்புகள் ஏற்பட்டன.



இந்த நிகழ்வில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட இந்திய அரசு , NPCI என்ற RBI உதவியுடன் நிறுவப்பட்ட அமைப்பின் உதவியுடன் RuPay என்ற உள்நாட்டு சேவையை 2012-ஆம் ஆண்டு நிறுவியது. ரூபே ஒப்பீட்டை கீழே படிக்கவும் 


ரூபே (Rupay)
மாஸ்டர் / விசா (Master/Visa)
பணபரிமாற்ற சர்வர் அமைந்துள்ள இடம்
இந்தியா
அமெரிக்கா போன்ற வெளிநாடுகள்
தினசரி பணபரிமாற்றங்கள் 
20% (மொத்த பரிமாற்றத்தில்)
வெளியிடப்படவில்லை
வங்கிகள் சராசரியாக ஒவ்வொரு பணபரிமாற்றத்திற்கும் செலுத்தும் தொகை
45 பைசா
3 ரூபாய்
நிறுவனர்
இந்திய அரசு
வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள்
அதிக பயன்பாட்டின் விளைவு
1)இந்திய பொருளாதாரம் நிலைத்தன்மை அடைய உதவும் (அந்நிய செலவாணி கையிருப்பு). 2) வெளிநாட்டு அமைப்புகள் அல்லது அரசுகளின் தடைகள் நம்மை பாதிக்காது
1)அந்நிய செலவாணி கையிருப்பு குறைகிறது,
2) அந்தந்த நாடுகளின் சட்டங்களை பின்பற்றவேண்டிய நிலையில் இந்நிறுவனங்கள் இருப்பதனால் அவசரகாலங்களில் நம் நாட்டிலும் ரஷ்யா போன்ற நிலை ஏற்படலாம்.
குறைகள்
மாதாந்திர பயன்பாட்டு அளவுகள் விதிக்கப்பட்டுள்ளதால் . குறைந்த அளவே பணப்பரிமாற்றம் செய்ய முடிந்தது . ஆனால் பிளாட்டினம் சேவை மூலம் அந்த குறையை போக்கியுள்ளது
தனிமனித அளவில் குறைகள் எதுவும் இல்லை என்று கூறலாம் , ஆனால் ஒரு நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைகிறது. இது அந்த நாட்டின் பணமதிப்பை சர்வதேச நிலையில் பாதிக்கிறது.

இந்திய அளவில் அனைத்து  ATM மையங்களிலும் , 90% விற்பனை முனையங்களிலும் (PoS) ரூபே பயன்படுத்தலாம். அடுத்தமுறை வங்கிக்கு செல்லும்போது இந்த ரூபே அட்டையை வாங்கி பயன்படுத்தி பார்த்துவிடுங்கள் . 

திருமுருகன் காந்தி சொல்வது உண்மையா ?

திருமுருகன் காந்தி அவர்கள் சில தகவல்களை பரப்பி வந்தார் . அவற்றுள் மிகவும் முக்கியமானது இந்திய அரசு  உலக வணிக அமைப்பு (WTO )(குறிப்புதவி-1) என்ற சர்வதேச அமைப்புடன் செய்த ஒப்பந்தம்.

அவருடைய கருத்து :
இந்திய அரசு ஒரு ஒப்பந்தம் மூலமாக நியாய விலை கடைகளை மூட திட்டமிட்டுள்ளதாகவும் . இந்த ஒப்பந்தம் உலக வணிக அமைப்பு உடன் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறி இருந்தார்(குறிப்புதவி-5)


உண்மை நிலவரம் :
உலக வணிக அமைப்பு பொதுவாக இரண்டு ஒப்பந்தங்களால் , ஒவ்வொரு உறுப்பு நாட்டு ஏற்றுமதியும் மற்ற உறுப்பு நாடுகளில் சரியான முறையில் சந்தை படுத்த துணை புரிகிறது .

அவ்விரு ஒப்பந்தங்கள் :
(1) வர்த்தக எளிமையாக்க ஒப்பந்தம் (குறிப்புதவி-2)
(2) உணவு பொருட்கள் சேமிப்பு மற்றும் கையிருப்பு வைத்தல் தொடர்பான ஒப்பந்தம் (குறிப்புதவி-3)

இவற்றுள் வர்த்தக எளிமையாக்க ஒப்பந்தம், பொருட்களை துறைமுகங்களில் இருந்து வேகமாக அனுப்பவும் , பெறவும் வழி செய்யும் ஒரு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு நிராகரித்து வந்தது. அதற்கு காரணம் , மேற்குறிப்பிட்டுள்ள இரண்டாவது ஒப்பந்தமாகும்.

இரண்டாவது ஒப்பந்தத்தின் படி விவசாயிகளுக்கு மானியம் வழங்கும்போது , "மொத்த மானியத்தொகையானது  1986-88 ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியின் மதிப்பில் 10%க்கும் மேல் இருக்கக் கூடாது" என்பதாகும். இதனை இந்திய அரசு எதிர்த்து வந்தது.

    உலக வணிக அமைப்பின் சட்டபடி அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்று கொண்டால் தான் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படும். அனால் இந்திய அரசு மேற்கூறிய இரு ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இவ்விரு ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதை கண்டித்தன. அனால் இந்திய அரசு விடா பிடியாக இருந்ததன் விளைவாக "அமைதி ஒப்பந்தம் " மூலமாக இந்திய நாட்டிற்கு மட்டும் இந்த மானிய ஒப்பந்தத்தில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டது . அதன் விளைவாக இந்திய அரசு  "வர்த்தக எளிமையாக்க ஒப்பந்தத்தை " ஏற்று கொண்டது. (குறிப்புதவி-6)

இந்த ஒப்பந்தங்களில் நியாயவிலைக்கடை பொருட்கள் பற்றி எந்த ஒரு பிரிவும் கையெழுத்தாகவில்லை.

இதிலிருந்து திருமுருகன் காந்தி அவர்கள் மக்களிடம் தவறான தகவலை பரப்புகிறார் என தெரிய வருகிறது.

இந்திய அரசு அவர் கூறுவது எதுவும் உண்மை இல்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

             உலக வணிக அமைப்பின் செய்திகள் மிகவும் கடினமான முறையில் , சாதாரண மக்களுக்கு புரியாத நிலையில் இருக்கும். அதனால் தகவல்களை தவறாக புரிந்துகொண்டாரா ? இல்லையேல் அரசியல் எண்ணம்கொண்டு , பொய்யுரைத்தாரா ?


குறிப்புதவிகள் :

1.https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

2. https://www.wto.org/english/tratop_e/tradfa_e/tradfa_e.htm

3. http://www.business-standard.com/article/news-ians/india-working-for-solution-to-wto-food-stockholding-issue-115072201514_1.html

4. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=144868

5. https://www.youtube.com/watch?v=CZk6oNcIKLs

6. http://www.thehindubusinessline.com/opinion/all-you-wanted-to-know-about-peace-clause/article6280907.ece

முட்டை வறுவல் செய்வது எப்படி?


தேவையான  பொருட்கள் :
முட்டை-2
தேங்காய்- ¼ மூடி (திருவியது)
சிறிய வெங்காயம் -5
 நல்லமிளகு பொடி- ½ ஸ்பூன்
உப்புஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை விளக்கம் .

1.சிறிய வெங்காயம் மற்றும் கறுவேப்பிலையை நன்றாக பொடி  பொடியாக நறுக்கி இவற்றுடன் நல்லமிளகு, உப்பு, தேங்காய் மற்றும்  முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.

2.அடுப்பில் கடாய் சூடானதும் முட்டை கலவையை விட்டு, முட்டை பொறு பொறுவென்று ஆகும் வரையில் நன்றாக வறுக்கவும்.

3.சுவையான முட்டை வறுவல்/முட்டை துவரன் தயார்.இதனை சாதத்துடனும் சாப்பிடலாம்,அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் உண்ணலாம்.


சுவையான அவியல் செய்வது எப்படி?


தேவையான  காய்கறிகள் :

வழுதனங்காய்-1
வாழைக்காய் -2
முருங்கக்காய் -1
அவரைக்காய் -5
பச்சை  மிளகாய்  -2
வெண்டைக்காய்-1
காரட் -1
உப்பு - ½ ஸ்பூன் /தேவைக்கேற்ப 
தயிர் -2 ஸ்பூன் 
தண்ணீர் -1 அல்லது  1 ½ கப் /தேவைக்கேற்ப 
அரைப்பதற்கு தேவையான  பொருட்கள் :
தேங்காய்  -1 மூடி  (துருவியது )
சீரகம் -1 டீஸ்பூன் 
பூண்டு -2  பல் 
மஞ்சள்  பொடி-1/2 டீஸ்பூன் 
பச்சை  மிளகாய் -2
கறிவேப்பிலை 
செய்முறை விளக்கம் .
1.மேற்குறிப்பிட்டுள்ள  காய்கறிகள்  அனைத்தையும்  நீள வாக்கில் வெட்டிக்  கொள்ளவும்.
2. தேங்காய் ,சீரகம் ,பூண்டு ,மஞ்சள்  பொடி ,பச்சை மிளகாய் மற்றும்  கறிவேப்பிலையை மிக்சியில் போட்டு அரைத்து  எடுக்கவும்.(மை  போன்று  அரைக்க  வேண்டியதில்லை)
3.அரிந்து வைத்துள்ள  காய்கறிகள்  மற்றும்  அரைப்பினை ஒரு  கடாயில் வைத்து  தேவைக்கேற்ப தண்ணீர்  மற்றும்  உப்பு  சேர்த்து மூடி வைத்து  வேக விடவும்.
4.காய்கறிகள்  நன்றாக வெந்த பின்னர் தயிர் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
5.கடைசியாக தேங்காய்  என்னை விட்டு கிளறி இறக்க வேண்டும்.சுவையான கேரளா ஸ்டைல் அவியல் தயார்.

குறிப்புகள்:
காய்கறிகளை சற்று மெலிதாக அரிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
சற்று இளம் தேங்காய் (அதிகமாக முற்றாதது )  உபயோகித்தால் அவியலின் சுவை கூடும்.
அவியலினை வாழை இலை கொண்டு மூடி வேக வைத்தால் வித்தியாசமான ஓர் சுவையினை உணரலாம்.
தயிருக்கு பதிலாக மாங்காய் அல்லது புளி  உபயோகிக்கலாம். (தயிர் இல்லையென்றால் மட்டும்)
கடைசியில் தேங்காய் எண்ணெய் விடுவதிற்கு பதிலாக கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து விடலாம்.

இந்தியாவிற்கு 4G வரப்போகுது டோய் !

                                  நான்காவது தலைமுறை தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இந்தியாவிற்குள் வெகு விரைவில் நுழைய இருக்கிறது. மத்திய அரசின் நிறுவனமான (TRAI) இந்திய தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு இது பற்றிய சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் சில ஆரம்பகட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு பின்னர் அக்டோபர் மாதம் 4G அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரைகள் வெளியடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

                 5 முதல் 12 Mbps வேகத்துடன் இந்த சேவை அளிக்கப்படும் என சில தகவல்கள் வெளியாகின்றன. VOIP எனப்படும் இணையத்தில் இருந்து தொலைபேசிக்கு பேசும் தொழில்நுட்பத்திற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட இருக்கிறது என்பது இதில் மகிழ்ச்சி தரும் செய்தி . எது எப்படியோ , இந்த ஏலத்திலும் கொள்ளை நடக்காமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சி 

தயாளு அம்மாள் தலைகாத்த தமிழ்

              2ஜி அலைக்கற்றை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட துணைக் குற்றப்பத்திரிகையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் குற்றம் சாட்டப்பட்டோர் வரிசையில் சேர்க்கப்படாதது குறித்து சிபிஐ விளக்கமளித்துள்ளது.

            இரண்டு காரணங்களை கூறியுள்ளது சிபிஐ அவை "1 . அவருக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் அறவே தெரியாது 2 . அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் அனைத்து பொறுப்புகளும் சரத்குமாரிடம் தான் இருந்தன "

கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாள் பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தாலும், நிறுவனத்தின் செயல்பாடுகளிலும், பணிகளிலும் அவருக்கு பங்கில்லை. அவர் ஒரு செயல்படாத பங்குதாரராகவே இருந்திருக்கிறார் என சிபிஐ தெரிவித்திருக்கிறது.
 
இருப்பினும் அவரது பெயரை 154 சாட்சிகளில் ஒன்றாக வைக்க சிபிஐ பரிந்துரைத்துள்ளது.



தர்மம் தலைகாக்கும் என படித்திருக்கிறேன் ,முதல்முறையாக இங்கு ஒருவரை தமிழ் தலைகாத்திருக்கிறது.


இன்றைய நிலையில் இந்தியாவிற்கு கம்யூனிசம் தேவையோ ?

தலைப்பை பார்த்ததும் பலரும் இது ஒரு சராசரியான கம்யூனிச ஆதரவு இடுகை என்று எண்ணுதல் கூடும். நம்மை பொறுத்தவரை கம்யூனிசம் என்றால் கத்தி திரைப்பட...